Prabakaran Chandran
2 min readJul 23, 2020

மெல்லத் திறந்தது கதவு...!

ஆமாம்...கல்லூரி மாணவர்களுக்கு , மெல்ல ஒரு கதவு திறந்துள்ளது. பெருந்தொற்றின் மத்தியில் தேர்வுகள் ரத்து என்னும் செய்தி தான் அந்த கதவை திறந்துள்ளது. சரி அடுத்து என்ன நடக்கும் கல்லூரி பருவத்தில்....

அதற்கு முன் உங்களை நீங்களே ஒரு சிறு பரிசோதனை செய்து கொள்வீராக...
கல்லூரிகளின் Webinar களை தாண்டி இந்த பெருந்தொற்று பொழுதில் நீங்கள் உங்களுக்கு கற்றல் (learning) எனும் முறையில் செய்து கொண்டது என்ன? அப்படி ஏதேனும் இருந்தால் சந்தோஷமே...கவலை தவிர்க்க... தொடர்க....ஏற்றம் நிச்சயம்..

ஆமாம் அதென்ன பெருந்தொற்று வேலையில் கற்றல்... ஆம்..கடந்த 4 , 5 மாதங்கள் யாருக்கு வேண்டுமாயின் கஷ்டகாலமாய் இருந்திருக்கலாம் கற்போர்க்கு அல்ல..கோரோணா தந்த பாடங்களில் ஒன்று படிப்பினைகளில் கற்றுக்கொண்டே இருத்தல்..3 வகை பட்ட மாணவர்களை காண்கிறோம் அதில் நீங்கள் எந்தவகை என தெரிந்து வருங்காலத்தில் செயல் படுங்கள்..

1. கோரோணா காலத்தில் அதிகம் கற்றலில் ஈடுபட்டோர் (mostly involved in learning) - department syllabus அயும் தாண்டி interdisciplinary learners - இயன்றவரை பரந்துபட்டு கற்பவர்கள்.

2.இயன்றவரை , எப்போதாவது , கல்லூரி சொல்கிறதே என கற்போர் , Aptitute , C , reasoning என சிறு வட்டத்தில் சுற்றிக்கொண்டிருப்போர்..

3.காலம் கழித்த அன்பர்கள்...simply passed 4 , 5 months.

முதல் நபர் நீங்களாயின் கவலையே இல்லை...இந்த சோதனைக்காலம் பின்பு நல்ல அறுவடை உங்களுக்குத்தான்.

2ம் நபர் ஆயின் , உங்க ரூட் ஆ கொஞ்சம் recent technologies பக்கம் திருப்புங்கள்...
Aptitute கரைசேர்க்கும் காலம் போய் angular கரைசேர்க்கும் காலம் வந்துவிட்டது.தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.. நான் கெத்து என்ற பெருமை தவிர்த்து கெத்தான விடயங்களை கற்றுக்கொள்ளுங்கள்..Aptitude காதலை app dev லயோ Embedded லயோ திருப்புங்கள்.... நம்பிக்கை பிறக்கும்

3வது நபருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .. 5 மாதம் வரை போய் விட்டது.. இதுபோன்ற ஒரு கற்றல் காலம் இனி அமையுமா எனத் தெரியாது..
எல்லாம் சரியாகி வரும்போது மற்றோர் எல்லாம் mass ஆ வருவான்..நீங்க,???

1. Placement pathiya soldra.. அதெல்லாம் பாத்துகலாம் ப்ரோ என சொல்லபவர் எனில் கீழே இருப்பதை பாருங்கள்....

அ. ஏராளமான மாணவர்கள் 100 கணக்கில் coursera , udemy, uipath , udacity என certifications , specialisation முடிக்கிறார்கள் ஆனால் நீங்கள்...

ஆ. Ieee முதல் csi , sae வரை ஆயிரங்களில் webinar கள் அறிவு பகிர்வு நடந்தவண்ணம் உள்ளன ..ஆனால் நீங்கள்..

இ. Github , linkedin , domain சார்ந்த கம்யூனிட்டிகளில் மாணவர் பங்களிப்பு உயர்ந்து கொண்டே உள்ளது... ஆனால் நீங்கள்..

ஈ. இப்பொழுதெல்லாம் 1st , 2nd year மாணவர்கள் பலரெல்லாம் தனது லட்சிய domain expert ஆக முந்தி, உந்தி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

உ. எத்தனை எத்தனை innovative project idea க்கள் கட்டமைக்க பட்டு கொண்டே வருகின்றன...நீங்கள் ஒரு டெக் blog ஆவது படித்தீர்களா...

Html முதல் Docker வரை , pandas முதல் Pytorch வரை , ansys முதல் CAD வரை , Matlab முதல் Catia, rasberry, embedded வரை , DSP முதல் IOT வரை ,Bioinformatics முதல் perl, gene sequencing வரை , PiD முதல் PLC வரை என உங்கள் சக மாணவர்கள் கூகுள் எனும் திரைகடலோடி திரவியம் தேடிக் கொண்டிருக்க...நாமோ pubg updateல் மட்டும் உள்ளோம்...

Engineering , Science சார்ந்து வெண்டாமேனில் உங்கள் விருப்பம் சார்ந்து , கலை சார்ந்து தேடி கற்றுக்கொள்ளுங்கள்...உங்கள்.விருப்பம் ஆழ்ந்த கேள்விக்கு விடைத்தேடுங்கள்..முதலில் கேள்வியைத் தேடிங்கள்....

தெளியுங்கள் , தெரிந்து கொள்ளுங்கள்...

இன்னும் காலம் இருக்கிறது..

கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது கற்றல் மட்டுமே....